நிஜமாவே இவன் வாலுப் பையன்... சீனாவில் வாலுடன் பிறந்த அதிசயக் குழந்தை!

நிஜமாவே இவன் வாலுப் பையன்... சீனாவில் வாலுடன் பிறந்த அதிசயக் குழந்தை!
Updated on
2 min read

சீனாவில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு 10 சென்டி மீட்டர் நீள வால் இருந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தையைக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனெனில், பிறந்த குழந்தைக்கு 10 செ.மீ நீளத்தில் வால் இருந்துள்ளது. இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், தண்டுவடத்தில் குறைபாடுடன் கூடிய நரம்பியல் கோளாறால்தான் இந்த வால் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தனர்.

குழந்தைக்கு உள்ள வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்திருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும், அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், அதனை நீக்கினால் குழந்தைக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மிக அரியவகை நோயாக இது அறியப்படுகிறது. இதற்கு முன்பு கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்தக் குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் 6 செ.மீ நீள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கும் பிறந்த சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்து வால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இப்படி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200 குழந்தைகள் வரை இதுபோன்ற வாலுடன் பிறந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in