ஒரு பாட்டில் விஸ்கி விலை ரூ.22.5 கோடி மட்டுமே... ஏலத்தில் கோலாகலம்

உலகின் விலை உயர்ந்த மது
உலகின் விலை உயர்ந்த மது

60 ஆண்டுகளுக்கும் மேல்பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று 2.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. இது இந்திய கரன்சி மதிப்பில் சுமார் ரூ.22.5 கோடியாகும்.

மெக்கலன் மது தயாரிப்பு நிறுவனத்தால் ஒரே ரக மால்ட் தானியங்களால் தயார் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஸ்காட்ச் விஸ்கி பாட்டில்கள் 40 மட்டுமே உலகில் இருக்கின்றன. இவற்றில் சில பாட்டில்கள், 2 தினங்கள் முன்பாக நடைபெற்ற ஏலம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டன.

விஸ்கி பாட்டிலின் மதிப்பை உயர்த்தும் ஓவியம்
விஸ்கி பாட்டிலின் மதிப்பை உயர்த்தும் ஓவியம்

வலேரியோ அடாமி என்ற இத்தாலிய ஓவியரின் படைப்பு இடம்பெற்றிருப்பது, இந்த விஸ்கி பாட்டிலின் மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளது. இவற்றில் கணிசமான மது பாட்டில்கள் 2011ம் ஆண்டின் ஜப்பானிய நிலநடுக்கத்தின் போது அழிந்துபோனது, மிச்சமிருக்கும் விஸ்கி பாட்டில்களை அரிதானவையாக மாற்றி உள்ளது.

இதனால் இந்த விஸ்கி பாட்டில்களை ஏலத்தில் எடுப்போர், மதுவை ருசிப்பதை விட அடுத்த ஏலத்தில் மேலும் அதிகமான தொகைக்கு விற்பதையே வேலையாக வைத்திருக்கின்றனர். முன்னதாக இதே ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனதும், மற்றொரு பாட்டில் விஸ்கி 2019ல் அமெரிக்க டாலர் மதிப்பில் 1.9 மில்லியனுக்கு ஏலம் போனதும் குறிப்பிடத்தக்கது.

அரிதான ஸ்காட்ச் விஸ்கி
அரிதான ஸ்காட்ச் விஸ்கி

ஒவ்வொரு முறை மெக்கலன் விஸ்கி பாட்டில்கள் ஏலம் போகும்போதும், அதன் முந்தைய சாதனைகளை முறியடிப்பதை வழக்கமாக வைத்துள்ளன. விஸ்கியின் சுவையானது செறிவான கருமையான செர்ரி பழங்களின் இனிப்பு சுவையும், அவை அடைக்கப்பட்ட ஓக் கலனுமாக தனிச் சுவைக்கு காரணமாகி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in