அதிர்ச்சி... பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; 26 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!

பாகிஸ்தானில் 2 சுயேட்சை வேட்பாளர்களின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் 2 சுயேட்சை வேட்பாளர்களின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2 சுயேட்சை வேட்பாளர்களின் அலுவலகத்தில் குண்டு வெடித்து 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

குண்டுவெடிப்பில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்
குண்டுவெடிப்பில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கராச்சியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷுன் மாவட்டத்தின் கானோசாய் பகுதியில் சுயேட்சையாக அஸ்பாண்ட் யாஸ்கான் கக்கர் என்பவர் போட்டியிட உள்ளார். இதற்காக அதே பகுதியில் வேட்பாளர் அலுவலகம் ஒன்றை அவர் துவங்கி இருந்தார்.

நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு தீவிரம்
நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு தீவிரம்

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவரது அலுவலகம் அருகே இன்று காலை பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பலரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பால் வாக்காளர்களிடையே பெரும் அச்சம்
குண்டுவெடிப்பால் வாக்காளர்களிடையே பெரும் அச்சம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பிற்கு பிறகு குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் மருத்துவ ஊழியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சில மணி நேரத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள, ஜாமியத் உலேமா இஸ்லாம் என்ற அமைப்பினரின் அலுவலகத்தில் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் குண்டுவெடிப்புகளால் பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in