நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் B.Arch., படிக்கலாம்... NATA நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தருணம் இது

பிஆர்க் பயில்பவர்
பிஆர்க் பயில்பவர்

பொறியியலில் கட்டிடக்கலை உயர்கல்வியான பி.ஆர்க்., படிப்பை நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் பெற விரும்புவோர், அதற்கான நுழைவுத்தேர்வான NATA-க்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிக்க விரும்புவோர், அவற்றுக்காக வீதிதோறும் மலிந்திருக்கும் பொறியியல் கல்லூரிகளில் கிடைத்த பாடப்பிரிவுகளில் சேராது, நாட்டின் தலைசிறந்த கல்லூரியில் சேர்ந்து பிஆர்க் பயில இந்த NATA தேர்வு உதவும்.

வழக்கமான பொறியியல் படிப்புக்கான கனவுகளோடு, கட்டிக்கலை மற்றும் அது சார்ந்த வரைகலையில் இயல்பான ஆர்வம் கொண்டோர் நாட்டா நுழைவுத்தேர்வையும் பரிசீலிக்கலாம். கட்டுமான பொறியியலின் சிவில் இஞ்சினியரிங் படிப்பவர்களைவிட, கட்டிடக்கலை பயில்வோருக்கு சிறந்த பணி வாய்ப்புகளும், ஊதிய விகிதங்களும் காத்திருக்கின்றன என்பதை தனியாக குறிப்பிடத் தேவையில்லை.

பிஆர்க்
பிஆர்க்

கட்டிடக்கலை படிப்பில் சேர்வதற்கான NATA 2024 தேசிய திறன் தேர்வுக்கான பதிவு செயல்முறை, நேற்று(மார்ச் 1) தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவ மாணவியர் இந்த தேர்வுக்கு, NATA-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம்.

2024 - 2025-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இந்த வருடத்தின் ஏப்ரல் - ஜூலை இடையே சனி, ஞாயிறுகளில் இரு அமர்வுகளாக நடைபெறும். அமர்வு-1 தேர்வு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அமர்வு-2 தேர்வு, மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடத்தப்படும்.

ஒரு கல்வியாண்டில், NATA நுழைவுத் தேர்வுக்கு அதிகபட்சம் 3 முயற்சிகளாக தேர்வெழுதலாம். அப்படி எழுதினாலும், அனைத்து முயற்சிகளிலும் சிறந்த மதிப்பெண் முடிவுகள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும். NATA தேர்வின் மதிப்பெண் 2 கல்வி ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NATA அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகி, ஒரு பயனர் கணக்கை முதலில் உருவாக்கிக் கொண்ட பிறகு விண்ணப்ப பதிவு நடைமுறைகளை தொடரலாம். முதலில், அங்கே கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு, பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு உடன் தனிப்பட்ட கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிஆர்க்
பிஆர்க்

அதன் பிறகு வழக்கமான விண்ணப்ப படிவ நிரப்பலை ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளலாம். தொடர்ந்து உரிய ஆவண நகல்களை அப்லோட் செய்ததும், ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாகவே தேர்வு கட்டணத்தையும் செலுத்தி சப்மிட் செய்ய வேண்டும். நிறைவாக கிடைக்கும் உறுதிபடுத்தப்பட்ட பக்கத்தை பிர்ண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது எதிர்கால தேவைக்கு உதவும்.

பள்ளி மேல்நிலைக்கல்வியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களுடன், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அல்லது தேறிய மாணவர்கள் நாட்டா நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு படித்து, கணிதப்பாடங்களுடன் டிப்ளமா படிப்பை மேற்கொள்வோர் மற்றும் தேறியவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள்.

மேலதிக விவரங்களை இந்த கையேடு மூலம் அறியலாம்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in