
சென்னையில் மாநகராட்சி பள்ளியில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி மற்றும் ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவில் மாநகராட்சி மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து அவ்வழியாக சென்ற 10-ம் வகுப்பு மாணவி மற்றும் ஒரு ஆசிரியர் தலை மீது விழுந்தது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது, இதையடுத்து காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று திடீரென மாநகராட்சி பள்ளியின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சு விழுந்து மாணவி, ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!