'மனித குலத்திற்கு அயராத சேவை'... பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பங்காரு அடிகளாருடன் பிரதமர் மோடி
பங்காரு அடிகளாருடன் பிரதமர் மோடி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பங்காரு அடிகளார் கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பங்காரு அடிகளால் காலமானார்.

அவரது மறைவு செய்தி கேட்டு பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு சக்தி பீடத்தின் அருகில் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ஆன்மிகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தவர் என்றும் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in