முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம்; சபரிமலை கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை கோயிலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக  கார்த்திகை 1ம் தேதியான நேற்று நடை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து மார்கழி மாத இறுதிவரை  48 நாட்களுக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து  மகரஜோதிக்கு சபரிமலை சென்று தரிசனம் செய்வது ஐயப்ப பக்தர்களின் வழக்கம். ஆனாலும் பக்தர்கள் தங்கள் பணி,  உடல்நிலை உள்ளிட்டவற்றை பொறுத்து ஒரு சில நாட்களிலேயே சபரிமலை  சென்று வழிபட்டு வருவார்கள்.

மண்டல பூஜைக்காக நேற்று காலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில் பூஜைகள் முடிவடைந்த  பின்னர் பிற்பகல் 2 மணி முதல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  நேற்று முதல் நாளில் ஐயப்பனை வழிபட வேண்டும் என்ற விருப்பத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு படை எடுத்தனர். இன்றும் கூட்டம் அதிகமாக உள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 27ம் தேதி நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவும் அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்யவும் வசதியாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சபரிமலை தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் உறுதியாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைச்செய்து கொள்வதன் மூலம் ஐயப்ப பக்தர்கள் தங்களின் சபரிமலை பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப முன்பதிவு செய்து சிரமம் இன்றி ஐயப்பனை எளிதில் சென்று ஐயப்பனை தரிசித்து வரலாம். 

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்! அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in