1001 கிலோ பன்றிக்கறி படையல்... பக்தர்களுக்கு அட்டகாச விருந்து!

விருந்து சாப்பிடும் மக்கள்
விருந்து சாப்பிடும் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்காடு கிராமத்தில் 1001 கிலோ பன்றிக் கறியை சமைத்து சுடலைமாடன் சாமிக்கு படையலிட்டு பங்கேற்ற அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

தயாரான விருந்து
தயாரான விருந்து

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெட்டுக்காடு கிராமத்தில் அருள்மிகு முத்துப்பேச்சியம்மன், சுடலைமாடன் சாமி, காட்டேரு பெருமாள் சாமிக்கு கொடை விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு படையல் படைக்கப்பட்டது. அப்போது சுவாமிகளுக்கு தீர்த்தக் கொடை கும்ப நீர், பால், தயிர், சந்தனம், இளநீர், தண்ணீர், விபூதி , பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை மூலிகை திரவங்களில் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

சமையல் தயார் செய்யப் படுகிறது
சமையல் தயார் செய்யப் படுகிறது

அதன்பிறகு 1001 கிலோ பன்றி இறைச்சியை சமைத்து படையலிட்டு பூஜை செய்தனர். இதையடுத்து சுடச்சுட கமகமக்கும் வகையில் அசைவ விருந்து கிராம மக்கள் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு வந்த அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விழாவையும் விருந்தும் பங்கேற்றவர்களை  பெரிதும் வியக்க வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in