நவராத்திரி விழாவைக் கொண்டாட இந்தியாவின் மிக சிறந்த 9 இடங்கள் லிஸ்ட்! இத்தனை சிறப்புகளா?

கொல்கத்தா தசரா விழா
கொல்கத்தா தசரா விழா

தசரா என்பது இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த தசரா விழா கொல்கத்தா, மைசூரு உள்ளிட்ட பல நகரங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மைசூரு  தசரா விழா
மைசூரு தசரா விழா

தசரா என்பது புராண அரக்கன் மகிஷாசுரனை துர்கா தேவி வெற்றி கொண்டதைக் குறிக்கும். மற்றொரு கதை ராவணன் மீது ராமரின் வெற்றியைக் குறிக்கிறது. இந்தியாவில் தசரா  மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஊர்கள் குறித்த அறிமுகம்.

துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற நகரம் கொல்கத்தா. பல்வேறு தனித்துவமான துர்கா கோயில்களில் 9 நாட்கள் சிறப்பு அலங்காரங்களுடன் கோலாகலமாக தசரா கொண்டாடப்படுகிறது. அதோடு அங்கு துர்கா தேவி மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் வித்தியாச நிகழ்வும் நடைபெறுகிறது.

ராவணன் உருவம்
ராவணன் உருவம்

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில்  நாடக நடிகர்கள் ராமரின் வாழ்க்கையையும், ராவணனை வென்றதையும் சித்தரிக்கும் நாடகங்களை நடிப்பார்கள். மேலும் தசரா அன்று, ராவணனின் உருவ பொம்மைகள் இங்கு எரிக்கப்படுகின்றன.

கர்நாடகாவின் மைசூரில், தசராவை சிறப்பான  விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவிற்காக மைசூரு அரண்மனை, அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அரச குடும்பம் அரண்மனைக்குள் தேவியை வழிபட்டு மைசூரு வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறது. இந்த ஊர்வலத்தின் போது, ​​அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்கப் பல்லக்கில் அம்மன் வைக்கப்படுகிறார்.

மற்றொரு முக்கிய இடம் வாரணாசி. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான இங்கு ராம்நகர் கி ராம்லீலா என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்நகர் கோட்டையுடன் இணைந்து ராமகதைகள் நாடகமாக நிகழ்த்தப்படுகிறது. காவியக் கதையை 9 நாட்களும் அயோத்தியில் தொடங்கி லக்னோ வரை ஒவ்வொரு ஊரிலும் நடத்துகின்றனர். நடிகர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது, ​​பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்,

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம், தசரா மேளாவிற்கு பெயர் பெற்றது. தசராவின் புனித நாளில், காலையில் அரச மாளிகையில் மதச்சடங்குகள் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து, ராஜாவும் மற்ற அரச குடும்ப உறுப்பினர்களும் கண்காட்சி மைதானத்திற்கு வண்ணமயமான ஊர்வலத்தை மேற்கொள்கின்றனர். ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதர் ஆகியோரின் உயரமான உருவங்களை எரித்து ராஜா விழாவைத் தொடங்குவர்.

ராம்லீலா மைதானத்தில் தசரா விழா
ராம்லீலா மைதானத்தில் தசரா விழா

பஸ்தர் தசரா என்று அழைக்கப்படும் திருவிழா  சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரின் பழங்குடிப் பகுதியின் பாதுகாவலர் தெய்வமாக கருதப்படும் தண்டேஸ்வரி தேவியின் நினைவாக 75 நாட்களுக்கு நடத்தப்படுகிறது

இமாச்சலப் பிரதேசத்தில் தசராவின் போது, ​​மணாலியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலு நகரில் உள்ள ரகுநாதரை தரிசிக்க, இப்பகுதியில் உள்ள அனைத்து முக்கிய தெய்வங்களும் வருகிறது. இந்த தனித்துவமான திருவிழா தசரா அன்று தொடங்கி ஏழு நாட்கள் நீடிக்கும். 

ஹரியாணாவில் உள்ள  பராரா நகரம், தசராவின்போது முக்கியத்துவம் பெற்று விளங்கும். இந்த நகரம் ஏற்கெனவே உலகின் மிக உயரமான ராவணன் உருவ பொம்மையை கொளுத்தியதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அனைவராலும்  கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இதுவாகும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in