காவல் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
காவல் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

காவல் நிலையத்தில் போலீஸார் முன்பு மல்லுக்கட்டிய பெண்கள்: திருவள்ளூரில் பரபரப்பு

Published on

திருவள்ளூர் அருகே காவல் நிலைய வளாகத்தில் போலீஸார் முன்னிலையில் இரு பிரிவைச் சார்ந்த பெண்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாலி நகர் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழா கடந்த 17-ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைப்பெறும். இந்நிலையில் 8-ம் நாளான நேற்று இரவு நடுத்தெருவில் திரவுபதி அம்மன் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் ஊதுகுழல் கொண்டு மாட்டின் காதில் ஊதியதால் மாடு மிரண்டுள்ளது.

போலீஸார் முன்னிலையில் சண்டையிட்ட பெண்கள்
போலீஸார் முன்னிலையில் சண்டையிட்ட பெண்கள் HR Ferncrystal

இதனால் ஆத்திரமடைந்த சேகர்(40), மாற்று சமூகத்தை சேர்ந்த உதயகுமார் மற்றும் லட்சுமணனை அடித்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர்.

அப்போது இருதரப்பு பெண்களிடையே காவல் நிலைய வளாகத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவலர்கள் சமரசம் செய்து அனுப்பினர். பின் இருதரப்பை சேர்ந்த நான்கு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருவாலங்காடு பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

x
காமதேனு
kamadenu.hindutamil.in