பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்: 2 பேர் கைது!

அஹமதாபாத் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவர்
அஹமதாபாத் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவர்

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் அகமதாபாத் போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

குஜராத் பல்கலைக்கழக விடுதி யில் வன்முறை
குஜராத் பல்கலைக்கழக விடுதி யில் வன்முறை

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 300 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் சுமார் 75 பேர் விடுதியின் 'ஏ பிளாக்'-ல் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில், சுமார் 20-25 பேர் கொண்ட ஒரு கும்பல், வெளிநாட்டு மாணவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இந்த தாக்குதலில் கற்களும் வீசப்பட்டன. மேலும் மாணவர்களின் அறைகளும் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த இலங்கை, தஜிகிஸ்தானைச் சேர்ந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அஹமதாபாத் போலீஸார் அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, துணை போலீஸ் கமிஷனர் ( மண்டலம் 7) தருண் துக்கல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"குஜராத் பல்கலைக்கழக சம்பவத்தில், 20-25 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஹிதேஷ் மேவாடா, பாரத் படேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் அரசுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in