
இருசக்கர வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் இயக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி பகுதியில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விழுந்ததில் டிடிஎஃப் வாசனின் கை உடைந்தது. இருப்பினும் நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துவரப்பட்ட போது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், வாசனை கைது செய்தனர்.
இதையடுத்து 2 முறை ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது டிடிஎஃப் வாசன், சிகிச்சை பெற்று வரும் நிலையில். நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து காஞ்சிபுரம் 2வது நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!