அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசி நெற்றியில் குங்குமம்... திமுகவினரின் சாலைமறியலால் பரபரப்பு!

அண்ணா சிலைக்கு காவி சாயம்
அண்ணா சிலைக்கு காவி சாயம்

திருச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் அண்ணா சிலைக்கு மர்மநபர்கள் காவி சாயம் பூசியும், நெற்றியில் குங்குமம் வைத்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதும், காவி சாயம் பூசுவதும், அடிக்கடி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருச்சியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1984 ம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த சிலைக்கு திமுகவினர் அவ்வப்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசியும், நெற்றியில் குங்குமம் வைத்தும் சென்றுள்ளனர்.

அண்ணா
அண்ணா

இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, திமுக கவுன்சிலர் முருகானந்தம் உட்பட திமுகவினர் அண்ணா சிலை முன்பாக திரண்டனர். பின்னர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக
திமுக

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அண்ணா சிலை மீது காவி சாயம் பூசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், திமுகவினர் கலைந்துச் சென்றனர். இதற்கிடையில் மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக காவி சாயம் பூசப்பட்ட அண்ணா சிலை மீது தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்திய பின்பு சிலைக்கு பூட்டு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in