
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சமத்துவபுரம் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு இன்று காலை 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குரங்கை இறுக்கி சுற்றிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட மற்ற குரங்குகள் சத்தம் போட்டுள்ளன. உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று குரங்கினை இறுக்கி பிடித்து கொண்டிருந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப் பாம்பினை போராடி பிடித்தனர்.
மேலும், குரங்கை இறந்த நிலையில் மீட்டனர். மலைப்பாம்பு மற்றும் குரங்கினை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!