கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம், மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் அரசு விதிகளுக்கு உட்பட்டு லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கடந்த 2009 மற்றும் 2010 ஆண்டு காலகட்டத்தில் மார்ட்டின் சிக்கிம் மாநில லாட்டரி விதிமுறைகளை மீறி 910 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி மார்ட்டின் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் பின்னர் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து நேற்று கொச்சியில் இருந்து வந்த அமலாக்கத்துறை மீண்டும் கோவையில் உள்ள மார்ட்டின் வீடு உட்பட மூன்று இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனுக்கு சொந்தமான அலுவலகம், வீடு, நுங்கம்பாக்கத்தில் ஜீனிமுகமது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அரைஸ் குழும நிர்வாகியான ஆதவன் அர்ஜூன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள, வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!
இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!