எம்.பி-யாக துடிக்கும் தமிழக டிஜிபி... விருப்ப ஓய்வு பெற்று அரசியலில் குதிக்கிறார்!

டிஜிபி பி.கே.ரவி
டிஜிபி பி.கே.ரவி

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக விஜிலன்ஸ் டிஜிபி ஆக உள்ள பி.கே.ரவி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.கே.ரவி
பி.கே.ரவி

1989 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பி.கே ரவி, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்து தற்போது ஊர்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது 34 வருட பணி காலத்தில் இவர், பல்வேறு முக்கியமான வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது பிகே ரவியின் பணி மெச்சத்தக்கதாக இருந்தது. தீயணைப்பு துறை டிஜிபியாக ரவி இருந்தபோது, ‘விபத்தில்லா தீபாவளி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். தமிழ்நாடு முழுவதும் தீ விபத்துகளை தடுக்க 6 ஆயிரத்து 673 தீயணைப்பு வீரர்களை நியமித்ததோடு, ஆயிரத்து 610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நலனுக்காக நடத்தியும் பாராட்டை பெற்றார்.

ஓய்வு பெற மூன்று மாதங்கள் உள்ள நிலையில் பி.கே.ரவி விருப்ப ஓய்வு பெற்று பீகார் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in