நவராத்திரி விரதம் இருக்கிறேன்... நீயும் நானும் ஒன்று சேர்ந்து வாழ்வோம்... நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகரின் உருக்கமான கடிதம்!

ஜாக்குலின்,  சுகேஷ் சந்திரசேகர்
ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகர்

நவராத்திரிக்காக நான் 9 நாட்கள் விரதம் இருக்கிறேன் என தனது காதலியும், ஹாலிவுட் நடிகையுமான  ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்  கைது செய்யப்பட்டு  திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர்  ஒருவரிடம்  200 கோடி பணத்தை மோசடியாக செய்ததாக புகாரளிக்கப்பட்டு, மீண்டும் கைதாகியுள்ளார்.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்  இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.

அந்த கடிதம்
அந்த கடிதம்

சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை மதிப்பிலான பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரூ.500 கோடிக்கு ஜாக்குலினை வைத்து படம் தயாரிப்பதாக அவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இத்தனை நாட்களாக  சுகேஷுடனான காதலையும் இதுவரை நடத்திய சந்திப்பையும் ஜாக்குலின் மறுத்து வந்தார். தற்போது ஜாக்குலினும் சுகேஷும் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படம் வெளியாகி, வைரலானதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி தெரிந்திருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களையும் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானி என்பவரது பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஜாக்குலினிடமும் பிங்கியிடமும் விசாரித்து வருகிறார்கள்.

எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்பதால் ஜாக்குலின்,  பாட்டியாலா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே காதலி ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘என் பெண் புலியே... பேபியே ஜாக்குலின்’ என தொடங்கியுள்ளார்.

பேபி, தோஹா ஷோவில் நீ மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாய். உன்னை விட வேறு யாருமே அழகி அல்ல. மை பொம்மா! பேபி,  நவராத்திரி நாளை முதல் தொடங்குகிறது. இதனால் என் வாழ்வில் முதல் முறையாக உன் நல்வாழ்வுக்காக நான் 9 நாட்கள் விரதம் இருக்கிறேன். குறிப்பாக உன்னை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகள் விலக வேண்டும். உன்னையும் என்னையும் பார்த்து சிரித்தவர்கள் முகத்தை வெளியில் காட்ட முடியாது. உண்மை வெளியே வரும் நேரம் வந்துவிட்டது.

அம்மனின் அருளால் எல்லாமே நமக்கு சாதகமாகவே அமையும். விரைவில் நீயும் நானும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். நம் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது. வெற்றி நமதே என ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி காதல் கடிதத்தை தீட்டியுள்ளார். இந்த கடிதம் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in