திருட வந்த இடத்தில் அசந்து குறட்டை விட்டு தூங்கிய திருடன்: அலேக்காக தூக்கிய போலீஸ்!

குறட்டை விட்டு தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர்
குறட்டை விட்டு தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர்

தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டாங். கடந்த நவம்பர் 8-ம் தேதி இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாமெனத் திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்துப் புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டைச் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டிலிருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ எனக் கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையிலிருந்து வருவதை உணர்ந்து அங்குச் சென்றபோது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். அவர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

சீனாவை பதறவைக்கும் நிமோனியா காய்ச்சல்; இந்தியாவில் பரவுமா? - மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

பிக் பாஸ் நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி - பிஸ்மி மீண்டும் அதிரடி புகார்!

மிஸ் பண்ணாதீங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்!

மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா... ட்வீட் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!

இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in