பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

பாம்பு விஷ போதை வழக்கில் யூடியூபர் எல்விஷ் யாதவ் கைது
பாம்பு விஷ போதை வழக்கில் யூடியூபர் எல்விஷ் யாதவ் கைது

பிரபல யூடியூபரும், 'பிக் பாஸ் ஓடிடி 2’ வெற்றியாளருமான எல்விஷ் யாதவ், 'ரேவ் பார்ட்டி'-யில் பாம்பு விஷ போதை வஸ்தை ஏற்பாடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு விஷ போதை
பாம்பு விஷ போதை

'ரேவ் பார்ட்டி' என்பது இளைஞர்களை மையமாகக் கொண்ட இசைக்கு வேகமாக நடனமாடும் விருந்தாகும். இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்பவர்கள், பெரும்பாலும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டு குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள். குறிப்பாக பாம்பு விஷ போதையை இந்த பார்ட்டிகளில் பயன்படுத்துகின்றனர். பாம்பு விஷத்துக்கு அடிமையாதல் என்பது போதைப்பொருள் துஷ்பிரயோகமாகும்.

பாம்பு விஷத்தின் விளைவுகள் கணிக்க முடியாத அளவுக்கு ஆபத்தானவை. பல நாட்கள் நீடிக்கும். நீண்ட காலத்துக்கு, இதை பயன்படுத்துபவர்களிடையே உடல் மற்றும் உளவியல் ரீதியாக சார்ந்திருப்பதைத் தூண்டும். இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இது பொதுவான நடைமுறை அல்ல.
இந்நிலையில் பிரபல யூடியூபரும், 'பிக் பாஸ் ஓடிடி 2’ வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் (26), கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நொய்டா, செக்டார் 51-ல் உள்ள நடைபெற்ற 'ரேவ் பார்ட்டி'-யில், பாம்பு விஷ போதைப் பொருளை ஏற்பாடு செய்து தந்ததாக புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட எல்விஷ் யாதவ்
கைது செய்யப்பட்ட எல்விஷ் யாதவ்

அந்த பார்ட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பாம்பு விஷம் இருப்பதை தடயவியல் அறிக்கைகள் ஏற்கெனவே உறுதி செய்தன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க எல்விஷ் யாதவுக்கு, நொய்டா போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் நேற்று விசாரணைக்கு ஆஜரான எல்விஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தனது யூடியூப் வீடியோ பதிவுகளில் பாம்புகளுடன் தோன்றிய, எல்விஷ் யாதவிடம் அவருக்கு அவற்றை தந்தது யார் என போலீஸார் விசாரித்தனர். இதற்கு, பாலிவுட் பாடகர் பாசில்புரியா அவற்றை ஏற்பாடு செய்து கொடுத்ததாக எல்விஷ் யாதவ் கூறியுள்ளார். எனவே, அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in