அதிர்ச்சி... மூன்றரை வயது சிறுமியிடம் அத்துமீறிய பள்ளி பேருந்து கண்டக்டர்!

பிகேனர் காவல் நிலையம்
பிகேனர் காவல் நிலையம்

ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றரை வயது சிறுமி பிளே ஸ்கூலில் படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட அவரது தாயார் விசாரித்துள்ளார். அப்போது, பள்ளியின் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் மதன்லால்(34) என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், அப்பா, அம்மா இருவரையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கண்டக்டர் மதன்லாலை கைது செய்தனர். உடனடியாக அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. புகார் மற்றும் மருத்துவ அறிக்கையை அடிப்படையாக கொண்டு குற்றம்சாட்டப்பட்ட மதன்லாலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர் கமல் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி ஆசிரியையிடம் புகார் அளித்ததாகவும். ஆனால், அந்த ஆசிரியை சிறுமியை மிரட்டி அமைதிப்படுத்தியதாகவும் தெரிகிறது. பள்ளி சிறுமிகளை பாதுகாக்க வேண்டிய ஆசிரியை, அதை தட்டிக்கழித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in