3 கி.மீ தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பைக்; காரின் அடியில் சிக்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

காரின் முன்புறம் பைக் மாட்டியதில் தீப்பற்றி எரிந்தது
காரின் முன்புறம் பைக் மாட்டியதில் தீப்பற்றி எரிந்தது

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் காரின் முன்பகுதியில் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (39). கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால், தனது குடும்பத்தினருடன் காரில் சங்குத்துறை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார். பெம்பொன்கரை அருகே வந்த போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது கோபியின் கார் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனமும், அதில் வந்த சிறுவனும் காரின் முன்பகுதியில் சிக்கியுள்ளனர். ஆனால் கோபி, காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.

அஜாஸ் (15) என்ற 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
அஜாஸ் (15) என்ற 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

காரின் முன்பகுதியில் பைக்கும், சிறுவனும் சிக்கியிருப்பதை கண்ட அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டும், கோபி தொடர்ந்து சங்குத்துறை கடற்கரை நோக்கி காரை இயக்கியுள்ளார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இவ்வாறு கார் பயணித்துள்ளது.

சங்குத்துறை கடற்கரைக்கு வந்த போது, காரின் முன்பக்கம் தீப்பிடித்ததால், கோபி மற்றும் அவரது குடும்பத்தினர், காரை நிறுத்துவிட்டு அதிலிருந்து இறங்கி ஓடியுள்ளனர். சற்று நேரத்தில் சிறுவன், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை
விபத்து குறித்து போலீஸார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், பைக்கில் பயணித்தது, சூரங்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் (15) என்பது தெரியவந்தது. அஜாஸ், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இதையடுத்து, அஜாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரி இருசக்கர வாகனத்தில் சிக்கியது தெரியாமல் கோபி காரை இயக்கினாரா, அல்லது விபத்து ஏற்படுத்திய அச்சத்தில் காரை நிறுத்தாமல் ஓட்டி வந்தாரா என போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in