தப்பியது 4 கோடி... மணப்புரம் கோல்டு லோன் நிறுனத்தில் கொள்ளையடிக்க வந்தவரை மடக்கிப் பிடித்த மக்கள்!

தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி...
தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி...

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பிரதான சாலையில் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் வழக்கம் போல் நிறுவனத்தைத் திறந்துள்ளனர். அப்போது நிதி நிறுவன கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்திருக்கிறார். தீடிரென அந்த இளைஞர் தனது கையில் வைத்திருந்த கத்தியை அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தில் வைத்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி
ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி

தான் சொல்வதை அனைவரும் கேட்காவிட்டால், பெண் ஊழியரை கொலை செய்துவிடுவதாக அந்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் கொண்டு வந்திருந்த பையில் இருந்து வயர்களை எடுத்து, ஒரு ஊழியரிடம் கொடுத்து மற்ற ஊழியர்கள் ஒவ்வொருவராக கைகளை கட்டுமாறு கூறியுள்ளார்.

இதன் பின்னர் அவர்களிடமிருந்து நிதி நிறுவனத்தின் சாவியை வாங்கி கதவை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது சாவியை மாற்றிப் போட்டதால் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலிக்கத் துவங்கியது.

அலாரம் அடித்ததால் தப்பியோட முயன்ற கொள்ளையனை பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
அலாரம் அடித்ததால் தப்பியோட முயன்ற கொள்ளையனை பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அங்கிருந்தவர்களை விட்டுவிட்டு தப்பியோட முயற்சித்தார். ஆனால், சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் கையில் கட்டுடன் அந்த இளைஞரை விரட்ட தொடங்கினர். கையில் கட்டுடன் ஊழியர்கள் ஒரு இளைஞரை விரட்டுவதை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதற்குள் கொள்ளையடிக்க தேவையான ஆயுதங்கள் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு போலீஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, தப்பியோட முயன்ற இளைஞரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வத்தலக்குண்டு மணப்புரம் தங்க நகை கடன் நிறுவனத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் இருந்ததாக தெரிவித்த அதன் ஊழியர்கள், “திருட வந்தவன் முயற்சி தோற்றுப் போனதால் பத்திரமாக அத்தனையும் தப்பியது” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in