
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரை மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நேரம் என்ற போதும் ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இடைவிடாமல் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன்களை குறி வைத்திருக்கும் அமலாக்கத்துறை கடந்த 30ம் தேதி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து கெலாட்டின் இரண்டு மகன்களும் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை ஒன்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏலச்சீட்டு மோசடி வழக்கு ஒன்றிலிருந்து விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றபோது அவர்களை கையும் களவுமாக கைது செய்திருக்கிறது மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கிஷோர் மீனா, பாபுலால் மீனா ஆகிய இருவரும் ஏலச்சீட்டு மோசடி வழக்கில், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க, ரூ.17 லட்சம் பேரம் பேசி இறுதியில் 15 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். லஞ்சப் பணத்தை வாங்கும் போது அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்திருக்கிறது மாநில லஞ்ச ஒழிப்புத் துறை. அவர்கள் இருவரிடம் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!