லைவ் நிகழ்ச்சியின்போதே சுட்டுக்கொல்லப்பட்ட தொகுப்பாளர்... பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

லைவ் நிகழ்ச்சியின்போதே சுட்டுக்கொல்லப்பட்ட தொகுப்பாளர்... பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் எப்.எம்மில் லைவ் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த தொகுப்பாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜுவான் ஜுமலன் (வயது 57). கலம்பா நகரில் உள்ள வீட்டில் ஜுவான், லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஜுவான் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளார். ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான். அவருடைய இல்லத்திலேயே வானொலி நிலையம் நடத்தி வந்துள்ளார். இதுபற்றி தடயவியல் துறையினர், கலம்பா போலீசார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு புலனாய்வு அதிரடி படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், இந்த லைவ் நிகழ்ச்சியின்போது பதிவான வீடியோ, பேஸ்புக்கில இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும், நிகழ்ச்சியை கவனித்தவர்களில் சிலர் அதனை பதிவு செய்துள்ளனர். அதில், ஜுமலன் அணிந்திருந்த தங்க நெக்லசை மர்ம நபர் ஒருவர் பறிக்க முற்படுகிறார். அதன்பின் அவர் சம்பவ பகுதியில் இருந்து தப்பி ஓடுகிறார்.

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. அதிபர் மார்கஸ் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றதிலிருந்து இதுவரை 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மணிலா டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in