பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குத் தப்பியது எப்படி? - வெளியுறவுத்துறை விளக்கம்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோ குற்றச்சாட்டில் சிக்கிய மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ராஜாங்க கடவுச்சீட்டு எனப்படும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு பயணம் செய்ததாகவும், அமைச்சகத்திடம் அரசியல் அனுமதி பெறவில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனும், ஜேடிஎஸ் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஹாசன் தொகுதியில் போட்டியிடும் அவர், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு எப்படி சென்றார் என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ பிரஜ்வல் எந்தவொரு அரசியல் அனுமதியையும் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரவில்லை, நாங்களும் வழங்கவில்லை. அவர் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் மூலம் சென்றுள்ளார். எம்.பிகளுக்கான ராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா எதுவும் தேவையில்லை.

1967 பாஸ்போர்ட் சட்டம் இராஜதந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம். சட்டத்தின் விதிகளின்படி, வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம். அது தொடர்பாக எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை” என்று அவர் கூறினார்.

பிரஜ்வல் ரேவண்ணா, குமாரசாமி, மோடி, தேவகவுடா
பிரஜ்வல் ரேவண்ணா, குமாரசாமி, மோடி, தேவகவுடா

முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்ற்ய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவின் இராஜதந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறும், அவர் விரைவாகத் திரும்புவதற்குத் தேவையான பிற நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in