ஓய்வூதியம் வழங்காது இழுத்தடித்ததில் வேதனை... ஓய்வுபெற்ற ஊழியர் தற்கொலை... பொங்கி எழுந்த திமுக எம்எல்ஏ!

போலீஸாருடன் வாதிடும் சிவா
போலீஸாருடன் வாதிடும் சிவா

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் வழங்காது இழுத்தடித்ததில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நீதி கேட்டு கிளம்பிய திமுக எம்எல்ஏ-வால் புதுச்சேரியில் பரபரப்பு எழுந்தது.

புதுச்சேரி நேரு நகரை சேர்ந்த சோபிதகுமார் என்பவர் அரும்பார்த்தபுரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவருக்கு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லையாம்.

இது தொடர்பாக 62 வயதான சோபிதகுமார் 3 ஆண்டுகளாக துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். ஆனபோதும் அவருக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாததோடு, அது குறித்தான தெளிவானபதிலையும் உயரதிகாரிகள் வழங்கவில்லையாம்.

தீக்குளிப்பு
தீக்குளிப்பு

இதனால் கையறு நிலையில் மனமுடைந்த சோபிதகுமார், 2 தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி அரசு நிறுவனங்களில் ஒன்றின் முன்பாக பெட்ரோலில் தீக்குளித்தார். இந்த கோர முடிவில் படுகாயமடைந்த சோபிதகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் சிகிச்சை பலன்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். இதனால் சோபிதகுமார் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்தனர்.

ஓய்வூதியம் வழங்காது இழுத்தடித்த கான்பெட் மேலாண் இயக்குநருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும் திமுக எம்எல்ஏவுமான சிவா இணைந்து நின்றதோடு, போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விவாதம் செய்தார்.

புதுவை சிவா
புதுவை சிவா

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவா, “சோபிதகுமார் போன்று ஏராளமானோர் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டதில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அது குறித்த பட்டியலை விரைவில் வெளியிடுவோம். சகலத்திலும் தலையிடும் ஆளுநர் தமிழிசை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாவுக்கும் பொறுப்பேற்க வேண்டும்” என்று சாடினார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in