இதுக்கெல்லாமா கொலை செய்வார்கள்?: வாலிபருக்கு வலைவீச்சு!

கொலை செய்யப்பட்ட பஞ்சலிங்கம்.
கொலை செய்யப்பட்ட பஞ்சலிங்கம்.

மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதியால் ஏற்பட்ட பிரச்சினையில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலார்
கோலார்

கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள ஹெம்மிகேபுராவைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(42). இவர் லாரியில் மணல் அள்ளும் வேலை செய்து வந்தார். அவர் வீட்டின் அருகே நிறுத்தப்படும் லாரியில் இருந்த புழுதி பக்கத்து வீடுகளில் படிவதாக புகார் எழுந்தது. இதனால் பஞ்சலிங்கத்தின் நண்பரான சிரஞ்சீவி கண்டித்து வந்துள்ளார்.

நேற்று லாரியை பஞ்சலிங்கம் நிறுத்திய போது, அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சிரஞ்சீவிக்கும், பஞ்சலிங்கத்திற்கும் வாக்குவாதமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிரஞ்சீவி தனது நண்பர்கள் இருவருடன் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், பஞ்சலிங்கத்தை சிரஞ்சீவி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பஞ்சலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த சிரஞ்சீவி மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளக்கரை போலீஸார், கொலை செய்யப்பட்ட பஞ்சலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in