இப்ராஹிம்
இப்ராஹிம்

படுக்கை அறையில் பேனா கேமரா; பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ பதிவு செய்த மருத்துவ மாணவன் கைது!

படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண் உடை மாற்றுவதை வீடியோவில் பதிவு செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை ராயபுரம் மாதா கோவில் தெரு சேர்ந்தவர் அபுதாகீர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை இவரது மனைவி படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை பார்த்து அதனை எடுத்து ஆய்வு செய்தபோது அது பேனா கேமரா என்பது தெரிய வந்தது . இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் அபுதாகீருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக வீட்டிற்கு வந்த அபுதாகீர் அந்த பேனா கேமராவை ஆய்வு செய்ததில் இவரது மனைவி உடை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அபுதாகீர் இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டுக்கு உரிமையாளரின் மகன் இப்ராஹிம் (36), அபுதாகீர் வீட்டு படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது. மேலும், இதன்மூலமாக அபுதாகீரின் மனைவி உடை மாற்றும் வீடியோக்களை பதிவு செய்ததும் தெரியவந்தது.

கைது (கோப்பு படம்)
கைது (கோப்பு படம்)

போலீஸார் நடத்திய விசாரணையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பேனா கேமரா மூலம் பல பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் அந்த கேமராவை பறிமுதல் செய்ததுடன், இப்ராஹிமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in