காதல் ஜோடி வெட்டிக் கொலை... காதலியின் தம்பி வெறிச்செயல்!

சகோதரி கொலை
சகோதரி கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தம்பி, தனது சகோதரியையும் அவரது காதலனையும் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார்(28). இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை மகள் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 3 வருடங்களுக்கு முன் மகாலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணமானது. ஆனால், திருமணமான ஒரே வாரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கே வந்துவிட்டார் மகாலட்சுமி.

திருமங்கலம் காவல் நிலையம்
திருமங்கலம் காவல் நிலையம்

இதையடுத்து, மகாலட்சுமி தனது முன்னாள் காதலனான சதீஷ்குமாருடன் மீண்டும் பழக தொடங்கியுள்ளார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததுடன், அடிக்கடி தனியாக வெளி இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இந்த விவரம், மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமாருக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரியைக் கண்டித்துள்ளார். அவரது காதலன் சதீஷ்குமாரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் இதை பெரிதுபடுத்தாமல் தங்களின் காதலைத் தொடர்ந்தனர். இவ்வளவு தூரம் சொல்லியும் இருவரும் தனது பேச்சைக் கேட்கவில்லையே என ஆத்திரம் கொண்ட பிரவீன்குமார், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சதீஷ்குமார் வேலை முடிந்து கொம்பாடியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த பிரவீன்குமார், கண்களில் மிளகாய் பொடியைத் தூவி நிலைகுலையச் செய்துவிட்டு, அரிவாளால் அவரது தலையை துண்டித்திருக்கிறார்.

துண்டித்த தலையை அந்தப் பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துவிட்டு, நேராக தனது வீட்டுக்குச் சென்ற பிரவீன் குமார் வீட்டில் இருந்த சகோதரி மகாலட்சுமியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அந்த சமயத்தில் தடுக்க வந்த தாய் சின்னப்பிடாரியையும் கையை வெட்டித் துண்டித்துவிட்டு அங்கிருந்து ஓடி தலைமறைவாகி இருக்கிறார் பிரவீன் குமார்.

தனது சகோதரன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு பதறியடித்து ஓடி வந்த சதீஷ் குமாரின் சகோதரர் முத்துக்குமார் இது தொடர்பாக திருமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை
மதுரை ராஜாஜி மருத்துவமனை

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீஸார், சதீஷ் மற்றும் மகாலட்சுமி உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதுண்டிக்கப்பட்ட சின்னப்பிடாரியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய பிரவீன் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே தங்கையை கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in