ஒப்பந்ததாரரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரி:கையும், களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்!

கைது
கைது

குடிநீர் ஒப்பந்ததாரருக்கான நிலுவை பில்லுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அஹமத்நகரில் மாநில தொழில் மேம்பாட்டு அமைப்பான எம்ஐடிசியில் உதவி பொறியாளராக பணிபுரிபவர் அமித் கெய்க்வாட்(32). இங்கு சத்ரபதி சாம்பாஜி நகரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரருக்கு ரூ.31.57 கோடி மதிப்பிலான குடிநீர் குழாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவேண்டிய 2.66 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது.

இந்த நிலுவைத்தொகையை கேட்கச் சென்ற ஒப்பந்ததாரரிடம், பில்லுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க 1 கோடி ரூபாயை உதவி பொறியாளர் அமித் கெய்க்வாட் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், நாசிக் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி உதவி பொறியாளர் அமித் கெய்வாட்டிடம் 1 கோடி ரூபாய் லஞ்சமாக ஒப்பந்ததாரர் கொடுத்தார். அப்போது கையும், களவுமாக அமித் கெய்க்வாட் அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கில் துணை பொறியாளர் கணேஷ் வாக் தலைமறைவாகியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மாநில ஊழல் தடுப்பு பணியகத்தால்(ஏசிபி) இந்த ஆண்டு வெளியிடப்பட்ட முக்கியமான லஞ்ச வழக்கில் ஒன்றாக கருதப்படுகிறது என்று இன்று அறிவித்துள்ளது.

செய்த பணிக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க அதிகாரி ஒருவர் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட விவகாரம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in