கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த வழக்கு... நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கின் தீர்ப்பு வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் சில மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மாணவிகளுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி
நிர்மலா தேவி

இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவல்லிபுதூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாணவிகளிடமும், போலீஸ் உயரதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. மூவரில் நிர்மலா தேவி தவிர ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பேராசிரியர் முருகன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். உடல் நலக்குறைவால் நிர்மலாதேவி ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வருகிற 29ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை அன்றைய தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in