‘2047-க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி’ சதியில் ஈடுபட்டவரை கேரளாவில் கைது செய்தது என்ஐஏ

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு

‘2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும்’ நோக்கில், தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ சார்பில் சதியில் ஈடுபட்டதாக, முக்கிய நபர் ஒருவரை கேரளாவில் இன்று கைது செய்தது என்ஐஏ.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) மாஸ்டர் டிரெய்னராக ஜாபர் பீமந்தாவிடா என்பவர் செயல்பட்டுள்ளார். இவரை கேரளாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று கைது செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஜாபர் பீமந்தாவிடா, ’2047-ம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ’, தடைசெய்யப்பட்ட பிஎஃப் அமைப்பின் சதி தொடர்பாக 2022-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் ஆவார்.

பயங்கரவாதிகள் -சித்தரிப்பு படம்
பயங்கரவாதிகள் -சித்தரிப்பு படம்

கேரளாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) தொடர்ந்து கண்காணித்து வந்ததில், ஜாபர் பீமந்தவிடா தனது கண்ணூர் வீட்டுக்கு அண்மையில் வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து களத்தில் இறங்கிய என்ஐஏ, ஜாபர் பீமந்தவிடாவை வளைத்து கைது செய்தது. இதுவரை 60 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் 59 நபராக ஜாபர் இருந்தார். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது என்ற நோக்கிலான திட்டத்துடன் செயல்பட்டு வந்த குழுவினருக்கு ஜாபர் பயிற்சி அளித்ததாகவும் என்ஐஏ குற்றம் சாட்டுகிறது.

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாஸ்டர் ட்ரெய்னர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஜாபர், பிஎஃப்ஐ அங்கத்தினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு தயாரானவர்களை அடுத்த கட்டமாக, ரகசிய இன்னொரு குழு நபர்களின் உதவியோடு குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். பிஎஃப்ஐ தலைமையின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தனி அதிகாரத்தை செயல்படுத்துவதற்கும் ஜாபருக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது.

என்ஐஏ
என்ஐஏ

இந்த ஜாபர் பீமந்தவிடா, இதற்கு முன்னதாக கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளில் தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கைதாகி இருக்கும் ஜாபரை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் தலைமறைவாக இருக்கும் இதர முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களது ரகசிய நடவடிக்கைகளை அறியவும் என்ஐஏ தயாராகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in