
பெங்களூரு மெட்ரோ ரயிலில் கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் பெரு நகரங்களில் மக்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில்கள் மிக அவசியமானதாக இருக்கிறது. இந்தியாவில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் சுத்தமான கழிவறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், மெட்ரோ ரயில்களில் கழிவறைகள் அமைக்கப்படுவதில்லை. மேலும் மெட்ரோ ரயில்களில் சுத்தத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக உணவுப் பொருட்களை ரயில்களில் பயணிக்கும் போது சாப்பிடக்கூடாது என்ற விதி அமலில் இருந்து வருகிறது.
இதனிடையே பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் கோபி மஞ்சூரியன் சாப்பிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணியை கண்டறிந்துள்ள மெட்ரோ நிர்வாகம் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குமார் என்ற அந்த நபர் ஜெயா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏறும்போது போலீஸாரால் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!