அதிர்ச்சி வீடியோ... நிலத்தகராறில் சகோதரன் மீது 8 முறை டிராக்டரை ஏற்றிக் கொன்றவர் கைது!

டிராக்டர் ஏற்றிப் படுகொலை
டிராக்டர் ஏற்றிப் படுகொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் சகோதரன் மீது 8 முறை டிராக்டரை ஏற்றிக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அடா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சகோதர உறவுமுறையிலான பகதூர் சிங் மற்றும் அடார் சிங் என இரு குடும்பங்கள் இடையே, நீண்டகாலமாக நிலத்தகராறு நீடித்து வந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக இது தொடர்பான மோதலில் 2 குடும்பங்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளன.

டிராக்டர் ஏற்றிப் படுகொலை
டிராக்டர் ஏற்றிப் படுகொலை

இன்று காலையும் இதே போன்ற மோதல் இரு குடும்பங்களுக்கும் இடையே மூண்டது. இரு குடும்பங்களையும் சார்ந்தவர்கள் வாய்த்தகராறு முற்றியதில் கழிகளாலும் தாக்கிக்கொண்டனர். அப்போது நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பகதூர் சிங் குடும்பத்துக்கு எதிராக, நிலத்தை இழந்ததாக சொல்லப்படும் அடார் சிங் குடும்பத்தினர் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.

அடார் சிங்கின் மகன் நிர்பத் என்பவர் சர்ச்சைக்குரிய நிலத்தில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த பகதூர் சிங்கின் மகன் தாமோதர் என்பவர் டிராக்டரை ஏற்றிக் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இந்த வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் நிஜமானது.

அருகிலிருந்த டிராக்டரை எடுத்து வந்த தாமோதர், அதே வேகத்தில் கீழே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிர்பத் மீது டிராக்டரை ஏற்றி இறக்கினார். நிர்பத் துள்ளத்துடிக்க சாகும்வரை 8 முறைகள் முன்னும் பின்னுமாக டிராக்டரை தாமோதர் ஏற்றி இறக்கினார். இதில் நிர்பத் பரிதாபமாக இறந்தார். கிராம மக்கள் புகாரை அடுத்து, தாமோதர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். நிர்பத் - தாமோதர் இருவரும் சகோதர உறவுமுறையை சார்ந்தவர்கள் ஆவர்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

‘5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி ஆகாது’ -கார்கே திட்டவட்டம்!

யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!

33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in