நகைக்கடையில் தீ விபத்து... பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் பரபரப்பு!

பாத்திரக்கடை, நகைக்கடையில் பயங்கர தீவிபத்து
பாத்திரக்கடை, நகைக்கடையில் பயங்கர தீவிபத்து

புதுக்கோட்டை அருகே நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பாத்திரக்கடைக்கும் தீ பரவியதில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை பகுதியில் முத்துலட்சுமி நகைக்கடை என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பாத்திரக்கடை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த பாத்திர கடையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த பட்டாசுகள் இந்த கடையின் உள்ளே சேமிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை முத்துலட்சுமி நகைக் கடையில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவி, அருகில் இருந்த பாத்திரக்கடைக்கும் பரவியது.

பாத்திரக்கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் பரபரப்பு
பாத்திரக்கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் பரபரப்பு

பாத்திரக்கடையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இதன் காரணமாக வெடித்து சிதறத் துவங்கின. இதனால் இரண்டு கடைகளும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. தற்போது பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பாத்திரக் கடையில் இருந்த பிளாஸ்டிக், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் நகைக்கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகளும் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் தீவிரம்

இதனால் இருகடைகளிலும் சேர்த்து பல கோடி ரூபாய் அளவிற்கு பொருள் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து, தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே விசாரிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவும் அபாயம் இருப்பதால் அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறந்தாங்கி சந்தைப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தீவிபத்து நேர்ந்த போது, கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in