அதிர்ச்சி! சென்னையில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது; இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது

ஹவாலா பணம்
ஹவாலா பணம்

சென்னையில் காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், இலங்கை தமிழர் உள்பட 4 பேரை பிடித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கார் பறிமுதல்
கார் பறிமுதல்

சென்னை கே.கே.நகரில் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடைபெறுவதாக தி.நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீஸார் நேற்று இரவு கே.கே.நகர் ஆர்க்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது காரில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 1 கோடி ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

 கைது
கைது

பின்னர் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்ததுடன் ஹவாலா பணம் கடத்தி வந்த அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கமலநாதன்(47), சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணன்(33), மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன்(45), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) ஆகியோரை பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், 1 கோடி ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிடிபட்ட 4 பேரையும் பணத்துடன் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குநர் சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரையும் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in