கழிவுநீர் லாரி மோதி விபத்து... இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன் உயிரிழப்பு!

விபத்தில் உயிரிழந்த, தந்தை மகன்
விபத்தில் உயிரிழந்த, தந்தை மகன்

சென்னையில் கழிவுநீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட்(55). இவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் நீச்சல் குளத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் சாமுவேல் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

நேற்றிரவு  தந்தையும், மகனும்  நுங்கம்பாக்கத்தில் இருந்து மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

இவர்களது இருசக்கர வாகனம், மதுரவாயல் - நொளம்பூர் சர்வீஸ் சாலை தரைப்பாலம் அருகில் செல்லும் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கழிவுநீர் லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில்  தந்தை ராபர்ட், மகன் சாமூவேல் என இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் 2 பேரின் உடல்களையும்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போக்குவரத்து போலீஸார், தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். தேவாலயத்துக்கு சென்ற தந்தை, மகன் இருவரும் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in