பகீர்... 11ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; தஞ்சையில் பரபரப்பு!

பகீர்... 11ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; தஞ்சையில் பரபரப்பு!

கடன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்த பெண்ணிடம் தனது தாய் அடிக்கடி  தகராறு செய்வது  பிடிக்காமல் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடி இடையர் தெருவில் வசித்து வருபவர் கதிரேசன். இவர் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வகுமாரி . இந்த தம்பதிக்கு மூன்று  மகள்கள் உள்ளனர். இதில் 3 வது மகள்  காவ்யப்பிரியா (16). இவர் தஞ்சாவூர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருடைய தாய் செல்வகுமாரி கடந்த ஆண்டு தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெண்ணிடம் கடன் கொடுத்துள்ளார். அதனை அவர் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படி அவர்கள் தகராறு செய்து கொள்வது காவ்யபிரியாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் அவர் இதுகுறித்து தனது தாயிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  தகராறு செய்ய வேண்டாம் அவமானமாக இருக்கிறது என பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் தாய்க்கும், அந்த பெண்ணுக்கும் தினசரி வாய்த்தகராறு தொடர்ந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவி காவ்யபிரியா இன்று காலை தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.   உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் தீயின் வேதனை தாங்காமல் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தாய் செல்வகுமாரி தனது மகளின் நிலையை பார்த்து கதறிக் கூச்சல் போட்டார்.  ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைத்து  மாணவியை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அத்துடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு  வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in