8 வாக்குச்சீட்டுகளை நான் சிதைக்கவில்லை; தவறுதலாக கூறிவிட்டேன்... சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி பல்டி!

சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி
சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி

முந்தைய நீதிமன்ற விசாரணையின் போது எட்டு வாக்கு சீட்டுகளை தான்தான் சிதைத்தேன் என தவறுதலாக கூறி விட்டதாக, சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கில் அதிகாரி அனில் மசிக் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தல்
சண்டிகர் மேயர் தேர்தல்

கடந்த ஜன.30ம் தேதி சண்டிகர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 36 இடங்களில், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப்குமார் 20 வாக்குகளை பெற்றிருந்தார். அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று கூறி, பாஜக வேட்பாளர், வெற்றிப் பெற்றதாக தேர்தல் அதிகாரி அனில் மாஷி அறிவித்தார்.

இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக, தேர்தல் அதிகாரி அனில் மசிக் வாக்குசீட்டுகளில் திருத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தல் வெற்றிக்கு தடைவிதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரியின் செயல், தேர்தல் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. மேலும், 8 வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி சிதைத்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை வெற்றிப் பெற்றதாக அறிவித்தது உறுதியாகியுள்ளது. அதனால், ஆம் ஆத்மி வேட்பாளரை வெற்றிப் பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி என அறிவித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வாக்குசீட்டுகளை சிதைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்நிலையில், அதிகாரி அனில் மசிக் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்தார். "தான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான போது மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. அதனால் முந்தைய நீதிமன்ற விசாரணையின் போது எட்டு வாக்கு சீட்டுகளை தான் தான் சிதைத்தேன் என தவறுதலாக கூறி விட்டேன். தற்போது மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்" என்று அனில் மசிக் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!

‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!

17 வயது சிறுமி பலாத்கார புகார் பின்னணியில் அரசியல் சதியா? மவுனம் கலைத்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in