17 வயது சிறுமி பலாத்கார புகார் பின்னணியில் அரசியல் சதியா? மவுனம் கலைத்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

எடியூரப்பா
எடியூரப்பா

'என் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ புகாரை சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று அறிவித்துள்ள எடியூரப்பா, புகாரின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதான கருத்தை மறுத்தார்.

காவல்துறை வசம் அளிக்கப்பட்ட புகாரின்படி, 81 வயதாகும் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா, பிப்ரவரி 2 அன்று 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ஏ ஆகியவற்றின் கீழ் கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பலாத்காரம்.
சிறுமி பலாத்காரம்.

எடியூரப்பா கர்நாடகாவின் முக்கிய அரசியல் பிரபலங்களில் ஒருவர். 4 முறை மாநிலத்தின் முதல்வராகவும், 3 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். எடியூரப்பா மீதான போக்சோ புகாரை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா உறுதி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தனது புகாரை தானே தட்டச்சு செய்து போலீஸில் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே தன் மீதான போக்சோ புகார் மற்றும் காவல்துறை வழக்கு தொடர்பாக எடியூரப்பா மவுனம் கலைத்தார். உதவி கோரி வந்த பெண் தன் மீது குற்றம்சாட்டுவதன் பின்னணி குறித்து அறிய வாய்ப்பில்லை என்றதோடு, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதான கருத்தையும் அவர் நிராகரித்தார்.

”எனக்கு எதிராக ஒரு பெண் புகார் அளித்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு மாதம் முன்பாக அவர் என்னைப் பார்க்க வந்தார். ஆரம்பத்தில் அதனை நான் கவனிக்கவில்லை. ஒருநாள் அப்பெண் அழுவதைக் கவனித்து அழைத்து விசாரித்தேன். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஒரு புகார் குறித்து விளக்கினார். உடனடியாக போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு, அப்பெண்ணுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். மேலும் அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தும் அனுப்பி வைத்தேன்.

பலாத்காரம்
பலாத்காரம்

ஆனால், அந்தப்பெண் திடீரென என்மீது குற்றஞ்சாட்ட ஆரம்பித்து விட்டார். அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் என்றும் நினைத்து போலீஸாரிடம் விசாரித்தேன். ஏனோ இந்த சம்பவம் திரிக்கப்பட்டு எனக்கு எதிரான எப்ஐஆராக மாற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் சட்டப்படி கையாள்வோம். ஒருவருக்கு உதவி செய்வது இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மற்றபடி இது அரசியல் சதியாக இருக்கும் என்று நான் நம்பவில்லை" என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

இதனிடையே போக்சோ புகாரின் கீழ் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட இருப்பதாக கர்நாடகாவில் அரசியல் பதற்றம் எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருக்கத்தில் பாஜகவின் மதிப்பை, போக்சோ புகார் மற்றும் கைது நடவடிக்கைகள் களங்கப்படுத்தும் என்பதால் பாஜகவும் கவலை அடைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in