'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

ஜீசஸ் கூடதான் குடிச்சாரு. நம் நாட்டில் குடி என்பது நீண்ட நாட்களாகவே இருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் குடிப்பதும் தவறான விஷயம்தான் என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’ரோமியோ’ படத்தில் விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி
’ரோமியோ’ படத்தில் விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்பு இயக்கம், நடிப்பு, எடிட்டிங் என சினிமாவின் பலதுறைகளிலும் இயங்கி வருகிறார். அவரது நடிப்பில் ‘ரோமியோ’ திரைப்படம் ஏப்ரல் 11 அன்று வெளியாக இருக்கிறது. இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று முன்பு வெளியாகி இருந்தது.

அதில் முதலிரவு அறையில் கணவன் கையில் பால் சொம்புடனும், மனைவி குடிப்பது போன்றும் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் மது ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய முதலிரவு அறையில் பெண் கையில் சரக்கு பாட்டிலுடன் இருப்பது எந்த விதத்தில் சரி? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

’ரோமியோ’ விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி
’ரோமியோ’ விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நடிகர் விஜய் ஆண்டனி, “ஆண், பெண் என இருவருக்குமே குடி பொதுவான விஷயம்தான். இதைச் சொல்வதால் நான் குடியை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. பெண் குடிப்பது தவறு என்றால் ஆண் குடிப்பதும் தவறுதான். குடி நம் சமுதாயத்தில் நீண்ட நாட்களாகவே உள்ளது.

திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார். அரசர்கள் காலத்தில் சோமபானம் இருந்திருக்கிறது. முன்பு நம் ஊரில் சாராயம் இருந்தது. இப்போது நவீனமாக பார் வந்துள்ளது. குடிக்கு காலத்திற்கேற்றாற் போல பெயர்தான் மாறி இருக்கிறதே தவிர, இந்த விஷயம் மாறாமல்தான் உள்ளது” என்று பதிலளித்துள்ளார். ஜீசஸ் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in