போட்டியிடுவது உறுதி... பாஜகவுடன் தான் கூட்டணி... ஓபிஎஸ் பேட்டி!

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓபிஎஸ் அணி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தவறான தகவல் என ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக போட்டியிடுகிறோம். வேறு நிலைப்பாடு எடுத்திருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தாங்கள் தான் அதிமுக என தொடர்ந்து கூறி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் எனவும் இந்த அணி தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஓபிஎஸ் அணி முடிவு செய்திருந்தது.

ஓபிஎஸ், வைத்திலிங்கம்
ஓபிஎஸ், வைத்திலிங்கம்

இதைத் தொடர்ந்து பாஜகவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தனர். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டிருந்தது. இரண்டு தொகுதிகள் வழங்க பாஜக முன்வந்ததாகவும், ஆனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இதனை மறுத்து, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் வருவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிட போவதில்லை எனவும், பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இரட்டை இலை சின்னம் கிடைக்காத காரணத்தாலும், தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பாததாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் பரவ தொடங்கியது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இது முற்றிலும் வதந்தி என்றும், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தாங்கள் போட்டியிடுவது உறுதி என்றும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in