தலைக்கேறிய போதை... தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நபரால் பரபரப்பு!

போதையில் விட்டை கொழுத்திய நபர்
போதையில் விட்டை கொழுத்திய நபர்

செங்கல்பட்டு அருகே குடிபோதையில் தன்னைத்தானே தீ வைத்துக் கொள்ள முயன்ற நபர், தன்னுடைய வீட்டையே கொளுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே செல்லம்மா நகர் பகுதியில், தட்சிணாமூர்த்தி (50) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாட மகள் வீட்டிற்கு சென்னை சென்றுள்ளனர். இதனால் தனியாக இருந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாததால் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில், தட்சிணாமூர்த்தி வீட்டின் படுக்கை அறையில் இருந்த படுக்கை மற்றும் பீரோவில் இருந்த துணிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளார். மேலும் தனக்குத்தானே தீயும் வைத்துக் கொண்டுள்ளார்.

வீடு எரிந்ததோடு போதை ஆசாமியும் படுகாயம்
வீடு எரிந்ததோடு போதை ஆசாமியும் படுகாயம்

இந்த தீ அவரது படுக்கையறை முழுமையாக பற்றி எரிந்ததோடு கடும் புகை மூட்டத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே தீ விபத்தில் படுகாயம் அடைந்த தட்சிணாமூர்த்தியை அருகிலிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் நடைபெற்ற இந்த சம்பவம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in