போலீஸ் அடித்ததால் உயிரிழந்த ஓட்டுநர்... இன்று மாலை முக்கிய தீர்ப்பு வெளியாகிறது!

உயிரிழந்த வேன் ஓட்டுநர் முருகன்
உயிரிழந்த வேன் ஓட்டுநர் முருகன்

காவல் துறையினரின் தாக்குதலில் மரணம் அடைந்தாகச் சொல்லப்படும் ஓட்டுநர் முருகனின் உடலை அவரது உறவினர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பெற்று இறுதிச் சடங்கு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

வேன் ஓட்டுநர் அடித்து கொலை
வேன் ஓட்டுநர் அடித்து கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான முருகன் கடந்த 8-ம் தேதி அச்சம்பட்டியில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். முப்பிடாதியம்மன் கோயில் அருகே வந்தபோது ஆட்டோ மீது அந்த வேன் மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு போக்குவரத்துப் போலீஸார் வேன் ஓட்டுநர் முருகனிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு முருகனை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த முருகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, போலீஸ் கண்மூடித்தனமாக அடித்ததால் தான் முருகன் இறந்துவிட்டதாகக் கூறி போராட்டத்தில் குதித்த முருகனின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தினர். இதனிடையே 9-ம் தேதி பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அது தொடர்பான அறிக்கையை முருகனின் உறவினர்களுக்கு போலீஸார் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த முருகனின் மனைவி மீனா, ‘எனது கணவரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அதனால் எங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு நடைபெற வேண்டும். காவலர்கள் தாக்கி உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும்’ என கோரி இருந்தார்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் மீரா,”முருகன் மரணம் சம்பந்தமாக விசாரணை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

முருகனின் மனைவி மீனாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அத்துடன் கூடுதலாக மூன்று சாட்சிகளிடமும் நீதிபதி விசாரணை நடத்திய நீதிபதி, ”இறந்து போனவரின் உடலை இன்று மாலை 4 மணிக்குள் உறவினர்கள் பெற்று இறுதிச்சடங்குகளைச் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விரிவான உத்தரவு இன்று மாலை 4 மணிக்கு பிறப்பிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in