வெற்றி துரைசாமியின் பெற்றோர்களின் டிஎன்ஏ மாதிரி விமானம் மூலம் அனுப்பி வைப்பு - காவல் ஆணையர் தகவல்!

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரது பெற்றோர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் அறையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “ஆயுதப்படை-1 வளாகத்தில் காவலர் நலன் சிற்றுண்டி விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது, புதிதாக 152 மீட்டர் தூரத்திற்கு மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய காவல் சிற்றுண்டி விடுதி போதிய வசதி இல்லாமல் இருந்ததால், குளிரூட்டி வசதியுடன் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான காவலர் பணியிட மாற்ற பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளது. சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான குற்றவாளி கைது செய்யப்படுவார்” என அவர் தெரிவித்தார்.

மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.
மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.

மேலும், “சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தொடர்பாக அவரது குடும்பத்தினரின் டிஎன்ஏ பரிசோதனையை இமாச்சலப் போலீஸார் கேட்டிருந்தனர். நேற்று அது தொடர்பான பரிசோதனை நடைபெற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு இன்று காலை விமான மூலம் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசலப் பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார். அப்போது அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

இதில், வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தை சுற்றி தீவிரமாக தேடியும் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதை வெற்றி துரைசாமியின் குடும்பத்தார் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in