தெருவிளக்கு எரியாததால் கார் விபத்து... ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம்
மதுரை மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம்

மதுரையில் தெருவிளக்குகள் எரியாததால், தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கலைநகர் முதல் தெருவை சேர்ந்த பிரேம் மேஷாக் என்பவர், மனைவி சைனி மேஷாக்குடன் கடந்த 2022ம் ஆண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பி.பி.குளம் உழவர் சந்தையின் அருகில் சென்றபோது, தெரு விளக்குகள் எரியவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இருட்டாக இருந்ததால் சாலையின் நடுவில் இருந்த தடுப்புகள் கண்ணுக்கு தெரியாமல் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் கார் சேதமடைந்ததோடு, இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

தெருவிளக்குகள் எரியாததால் விபத்து
தெருவிளக்குகள் எரியாததால் விபத்து

சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், சாலை ஓரங்களில் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்காததால், தங்கள் கார் விபத்தில் சிக்கியது எனவும் தன்னை போன்ற பலர் இருட்டிலேயே சாலைகளில் பயணிக்கும் நிலை உள்ளதாகவும் இதற்கு காரணமான மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் சைனி மேஷாக் கோரிக்கை விடுத்திருந்தார்.

நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாரி, உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் தொடர்பான ஆவணங்கள் மனுதார தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிவில், சாலையில் தெரு விளக்குகள் எரியாததால், தடுப்பில் கார் மோதி மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் சேவை குறைபாடு எனக் கூறி, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக மதுரை மாநகராட்சி சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in