கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்; கடைகளுக்குத் தீவைப்பு... சேலத்தில் பரபரப்பு!

கடைகளுக்கு தீவைப்பு
கடைகளுக்கு தீவைப்பு

சேலம் தீவட்டிப்பட்டி கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நாங்களும் கோயில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது.

கடைகளுக்கு தீவைப்பு கலவரம்
கடைகளுக்கு தீவைப்பு கலவரம்

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் இரு தரப்பினருக்கும் இடையே வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் உடன்பாடு எட்டப்படாததால், அதிகாரிகள் முன்னிலையிலேயே மோதல் வெடித்தது. இந்த மோதல் முற்றிய நிலையில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகளில் தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் சில வாகனங்களும் தீக்கிறையானது.

இந்த தகவல் கிடைத்ததும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவட்டிப்பட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடியும் நடத்தினர்.

கடைகளுக்கு தீவைப்பு
கடைகளுக்கு தீவைப்பு

இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலும் நடைபெற்றது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இயல்பு நிலையை கொண்டுவர போலீஸார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in