ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

கிரு நீர்மின் திட்டத்தில் ரூ.300 கோடி லஞ்சம் வாங்கியதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மீது வழக்குத் தொடர்ந்த சிபிஐ அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாலிக்கின் இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய பிற இடங்களில் தற்போது சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் தோஹா மாவட்டம், கிஷ்த்வார் வட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கிரு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ.2, 200 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் நடந்ததாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், கடந்த 2018 ஆகஸ்ட் 23 முதல் 2019 அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், இந்த திட்டத்தின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செனாப் பள்ளத்தாக்கு மின் திட்டங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நவீன் குமார் சவுத்ரி, பிற முன்னாள் அதிகாரிகள் எம்.எஸ்.பாபு, எம்.கே.மிட்டல், அருண் குமார் மிஸ்ரா ஆகியோரையும் படேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தையும் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறது சிபிஐ.

சிபிஐ
சிபிஐ

நீர்மின் திட்ட லஞ்ச விவகாரம் மட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீரில் அரசு ஊழியர்களுக்கு குழு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தங்களை வழங்கியதிலும் சத்யபால் மாலிக் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆண்டு ஏப்ரலில் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் வழங்கியிருந்தது.

இந்நிலையில் நீர்மின் திட்ட ஒப்பந்தத்துக்கு ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று சத்ய பால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மோடி அரசு கையாளும் விதம், புல்வாமா தாக்குதலில் உளவுத் துறையின் தோல்வி ஆகியவற்றை குறிப்பிட்டு மத்திய அரசை சத்ய பால் மாலிக் ஏற்கெனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்... தாயும், சேயும் பலியான சோகம்!

ரம்ஜான் உணவுத் திருவிழாவை தடை செய்யுங்க... பெங்களூரு தமிழர்கள் திடீர் போர்க்கொடி!

தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாரிசு வந்தாச்சு... தீயாய் பரவும் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in