நாட்டிற்காக உயிர்துறந்த முதல் அக்னி வீரன்... அக்‌ஷய் லக்ஷ்மன் வீரமரணம்!

வீரமரணமடைந்த அக்னிவீரர் அக்‌ஷய் லஷ்மன்
வீரமரணமடைந்த அக்னிவீரர் அக்‌ஷய் லஷ்மன்BG

நாட்டிற்காக களத்தில் உயிரிழந்த முதல் அக்னிவீரன் என்ற பெருமையை அக்‌ஷய் லக்ஷ்மன் என்ற இளைஞர் பெற்றுள்ளார்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் அக்னிவீர் என்ற திட்டம் மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களுக்கு, ராணுவத்தில் உள்ள அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இருப்பினும் அவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட ராணுவத்தினருக்கான வழக்கமான பணப்பலன்கள் எதுவும் கிடைக்காது.

இதனிடையே சியாச்சின் பகுதியில் ’ஃபயர் அண்ட் பியூரி கார்ப்ஸ்’ பிரிவில் பணியாற்றி வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த அக்னிவீரன் அக்‌ஷய் லக்ஷ்மன் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார்.

அக்னிவீரர் மறைவிற்கு ராணுவம் இரங்கல்
அக்னிவீரர் மறைவிற்கு ராணுவம் இரங்கல்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ’ஃபயர் அண்ட் பியூரி கார்ப்ஸ்’, உயிரிழந்த வீரருக்கு அஞ்சலியை செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

அவருக்கு ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து, பணியின் போது உயிரிழந்த முதல்வீரர் என்ற பெருமையை அக்‌ஷய் பெற்றுள்ளார்.

அக்னிவீரர் மறைவிற்கு ராணுவம் இரங்கல்
அக்னிவீரர் மறைவிற்கு ராணுவம் இரங்கல்

20 ஆயிரம் அடி உயரத்தில் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பணி ஆறு, உலகின் மிக உயரமான... ராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாகும். கடுமையான பனிப்புயல் மற்றும் உடலை ஊடுருவும் குளிர் ஆகியவற்றை இங்கு பணியாற்றும் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

’பணியில் அமைதியாக இருக்கும் இவர்கள், நாடு அழைக்கும் போது எழுந்து மீண்டும் அணிவகுத்து செல்வார்கள்’ என்ற தலைப்புடன் அவருக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in