
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் ஓட்டுநராகவும், அவர் நடத்தி வரும் நெய் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.
இந்நிலையில் நெய் வசூல் பணத்தில் சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சுரேஷ்குமாரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் சுரேஷ்குமாரை பிடித்து வந்து ஆகஸ்ட் 17-ம் தேதி நடராஜன் வீட்டில் வைத்து விசாரிக்கும் போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் சுரேஷ்குமாரை் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சுரேஷின் உடல் இரவோடு இரவாக அம்பிளிக்கை மயானத்தில் எரிக்கப்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கொலை தொடர்பாக இறந்து போன சுரேஷ்குமாரின் உறவினர் வடிவேலை போலீஸார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அம்பிளிக்கையைச் சேர்ந்த மனோகரன், பாண்டி, தேனியைச் சேர்ந்த சிவஞானம், நிலக்கோட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார், திருப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதில் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் நடராஜனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவல்துறை தன்னைத் தேடுவதை அறிந்த நடராஜன் கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நடராஜனை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஒட்டன்சத்திரம் அழைத்துச் செல்லப்பட்டார். கொலை வழக்கில் அதிமுக செயலாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!
இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!